ராணுவப் பள்ளியாக மாறிய பிக் பாஸ் வீடு: அதிரடி காட்டும் இந்த வார கேப்டன்!

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டனாக பிரவீன் தேர்வாகியுள்ளார்.
வீட்டுத் தல பிரவீன்
வீட்டுத் தல பிரவீன்படம் - எக்ஸ்
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான கேப்டனாக பிரவீன் தேர்வாகியுள்ளார்.

பிக் பாஸ் வீட்டை ராணுவப் பள்ளியைப் போன்று மாற்றி, விதிகளை வகுத்து அதனை சக போட்டியாளர்களையும் கடைபிடிக்கச் செய்வேன் என பிரவீன் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 4 வது வாரத்தை எட்டியுள்ளது. இரண்டாவது வாரத்தில் துஷாரும், 3வது வாரத்தில் கனியும் கேப்டனாக செயல்பட்ட நிலையில், 4வது வாரத்துக்கான கேப்டன் போட்டியில் வெற்றி பெற்று வீட்டுத் தல பொறுப்புக்குத் தேர்வாகியுள்ளார் நடிகர் பிரவீன்.

இவர் கேப்டனாகப் பொறுப்பேற்றதும் பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரையும் ராணுவப் பள்ளியில் சேர்ந்தவர்களைப் போலவே நடத்தியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பிக் பாஸ் வீடு, பிக் பாஸ் சொகுசு வீடு என இரு அணிகளுக்கும் அவர்களுக்குத் தேவையான பணிகள் நடக்கும் வகையில் விதிகளை வகுப்பேன் என்றும் அதனை போட்டியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விதிகளை மீறி நடப்பது பிக் பாஸ் போட்டியில் சமீபகாலமாகவே வழக்கமாகிவிட்ட நிலையில், இந்த வார கேப்டனாக பொறுப்பேற்றுள்ளதால், விதிகளை மீறுபவர்களுக்கு நான் தண்டனை வகுப்பேன் எனவும் பிரவீன் தெரிவித்தார்.

இது போட்டியாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினாலும், பார்வையாளர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளார்கள்
பிக் பாஸ் போட்டியாளார்கள்படம் - எக்ஸ்

இந்த வாரத்தின் கேப்டனாக தேர்வானதும் மிடுக்காக ராணுவ அதிகாரியைப் போன்று பிரவீன் நடந்துகொண்டது பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கேற்ப போட்டியாளர்களின் உடை, அழகுசாதனப் பொருள்கள், காலணிகள் போன்ற உடமைகளை பிக் பாஸ் பறித்துக்கொண்டு, அனைவருக்கும் சீருடை வழங்கியுள்ளார். இதனால், பிக் பாஸ் வீடு பார்ப்பதற்கு ராணுவப் பள்ளியைப் போன்று மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேற வாய்ப்புடைய நபர்களின் பட்டியல்!

Summary

bigg boss 9 tamil 4th week captain praveen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com