என் வாழ்நாள் முழுவதும் போற்றும் படம் பைசன்: அனுபமா உருக்கம்!

பைசன் திரைப்படம் குறித்து அனுபமா பரமேஸ்வரனின் பதிவு.
பைசன் படப்பிடிப்பில்.... அனுபமா பரமேஸ்வரன்.
பைசன் படப்பிடிப்பில்.... அனுபமா பரமேஸ்வரன்.
Published on
Updated on
2 min read

என் வாழ்நாள் முழுவதும் போற்றப்படும் படமாக பைசன் திரைப்படம் அமையும் என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

மேலும், இந்தப் படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பைசன் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அரசியல் தலைவர்கள், இயக்குநர்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் பைசன் படம் குறித்து அனுபமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”பைசன் வெளியாகி 10 நாள்கள் ஆகிறது, என்னுடைய இதயம் பெற்ற அன்பை, எப்படித் தக்கவைத்துக்கொள்வது என்பதைக் கற்றுக்கொண்டே இருக்கிறது.

அனுபமா பரமேஸ்வரன்.
அனுபமா பரமேஸ்வரன்.

சில படங்கள், வேலையாக மட்டுமில்லாமல், உணர்வுகளாகவும் மாறுகின்றன, பைசனும் எனக்கு அப்படித்தான். நான் வாழ்நாள் முழுவதும் போற்றும் படமாக அமைந்துள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு நன்றி, இப்படத்துக்காக என்னைத் தேர்ந்தெடுத்ததற்கும் இந்தக் கதையில் எனக்கான பாத்திரத்தைக் கண்டதற்கும் நன்றி. உங்கள் நம்பிக்கையை நான் எப்போதும் நன்றியுடன் காப்பாற்றுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

துருவ் விக்ரம் குறித்து அவர், ”இது அதிர்ஷ்டம் அல்ல, ஒவ்வொரு மூச்சிலும் நீங்கள் சம்பாதிக்கப்பட்டது, நீங்கள் இந்த ஒளியை பெற முழு தகுதியானவர்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ரஜிஷா விஜயன், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா, தயாரிப்பாளர், படக்குழுவை பாராட்டி அவர் பதிவிட்டுள்ளார். மக்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.

மேலும், பைசன் படிப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அனுபமா பகிர்ந்துள்ளார்.

Summary

Actress Anupama Parameswaran has posted a heartfelt message saying that Bison will be a film that I will cherish for the rest of my life.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com