

இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் டி. குகேஷ் அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகமுராவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இரு வாரங்களுக்கு முன்பு நடந்த மற்றொரு போட்டியில் குகேஷை வீழ்த்திய ஹிகாரு, குகேஷின் ராஜாவை தூக்கி எரிந்து தனது வெற்றியைக் கொண்டாடினார். இது சமூக வலைதளங்களில் விமர்சனங்களைப் பெற்றது.
ஆனால், இம்முறை குகேஷ் வெற்றி பெற்ற பிறகு, பதிலடி கொடுக்கும் வகையில் ஹிகாரு நடந்துகொண்டதைப் போன்று செய்யாமல், தனது சதுரங்க காய்களை அடுக்க ஆரம்பித்து தனது வெற்றியை வெளிப்படுத்தினார்.
வெற்றி பெற்ற பிறகு குகேஷ் நடந்துகொண்ட விதம் சமூக வலைதளங்களில் பாராட்டைப் பெற்று வருகிறது. இதுவே விளையாட்டு வீரனின் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றும், தோல்வி அடைந்தவர்களாக இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் பண்பு இயல்பிலேயே குகேஷிடம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் செயிண்ட் லூயிஸ் பகுதியில் கிளட்ச் செஸ் சாம்பியன்ஷிப் 2025 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஹிகாரு நகாமுராவுக்கும் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷுக்கும் இடையே இன்று (அக். 28) போட்டி நடைபெற்றது.
கருப்பு காய்களுடன் களமிறங்கிய குகேஷ், இரண்டாவது சுற்றிலேயே திறனுடன் காய்களை நகர்த்தி ஹிகாருவை வீழ்த்தினார். வெற்றி பெற்ற பிறகு, ஹிகாருவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் நடந்துகொண்டதைப் போன்று அநாகரிகமாக நடந்துகொள்ளாமல், சதுரங்க காய்களை அடுக்க ஆரம்பித்துவிட்டார்.
பலரும் இதனை எதிர்பார்க்காததால், அரங்கத்தில் இருந்தவர்கள் கோஷங்களை எழுப்பி குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் குகேஷின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிக்க | ஆஸி.க்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம்: சூர்யகுமார் யாதவ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.