ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் பெயருக்குத் தடை!

ப்ரோ கோட் பெயரில் மதுபான நிறுவனம் இருப்பதால், படத்தின் தலைப்புக்கு தில்லி உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
ரவி மோகனின் ப்ரோ கோட் படத்தின் பெயருக்குத் தடை!
Published on
Updated on
1 min read

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ப்ரோ கோட் படத்தின் தலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரவி மோகன் தயாரித்து, நடிக்கும் ப்ரோ கோட் படத்தை கார்த்தி யோகி இயக்குகிறார். இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஸ்ரீ கௌரி பிரியா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், ப்ரோ கோட் படத்தின் பெயருக்கு தடை விதிக்கக்கோரி, தில்லி உயர் நீதிமன்றத்தில் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஏனெனில், இந்நிறுவனமும் ப்ரோ கோட் என்ற பெயரில் மதுபானம் தயாரித்து வருகிறது.

இந்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், ஒரே மாதிரியான வணிகச் சின்னத்தைப் பயன்படுத்துவது என்பது முதல் பார்வையிலேயே விதிமீறல் எனத் தெரிகிறது.

இதனால், நுகர்வோர் மத்தியில் குழப்பம் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகையால், வழக்கு முடியும்வரையில் திரைப்படத்தின் விளம்பரங்களுக்கோ வெளியீட்டுக்கோ ப்ரோ கோட் என்ற பெயரைப் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது.

மேலும், இந்த மனு குறித்து ரவி மோகன் ஸ்டூடியோஸ் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க ஆணை பிறப்பித்த நீதிமன்றம், வழக்கின் விசாரணையை டிசம்பர் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இண்டோ-ஸ்பிரிட் பிவரேஜஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்த நிலையில், ரவி மோகனுக்கு சாதகமாகவே தீர்ப்பு அமைந்தது. இதனையடுத்து, மீண்டும் தில்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச் சின்ன விதிமீறல் வழக்கு தொடர்ந்தது.

இதையும் படிக்க: தனுஷ் மருமகன் பவிஷ் நடிக்கும் புதிய படம்!

Summary

Delhi HC imposes interim ban on Ravi Mohan's Bro Code movie title

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com