

லியோ படப்பிடிப்பு நடத்தப்பட்ட அரங்கில் பென்ஸ் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிப்படமானது. மேலும், இது கைதி மற்றும் விக்ரம் திரைப்பட கதாபாத்திரங்களுடன் உருவாகியிருந்ததால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியது.
ஆனால், லியோவான விஜய் குறித்த அரைகுறையான பிளாஷ்பேக் காட்சிகள் படத்திற்கு பலவீனமாக அமைந்தன.
தற்போது, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக ராகவா லாரன்ஸும் வில்லனாக நிவின் பாலியும் நடித்து வருகின்றனர்.
மேலும், எல்சியூ எனப்படும் லோகேஷ் கனகராஜ் திரைப்பட கதைகளுடன் இணைப்பை ஏற்படுத்தும் படமாகவே பென்ஸ் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு லியோ படப்பிடிப்பு நடைபெற்ற செட்டில் படமாக்கப்பட்டு வருவதால் பென்ஸ் கதை லியோ கதையுடன் தொடர்புடையதாக இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: சக்தித் திருமகன் கதை திருடப்பட்டதா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.