

நடிகர் அஜித்குமாரின் அட்டகாசம் படத்தின் மறுவெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியான அட்டகாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை விஜயம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை வரும் இன்று(அக்.31ஆம் தேதி) மறுவெளியீடாகுமென அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் படத்தை ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் மறுவெளியீடு செய்கிறார்.
இந்த நிலையில், அட்டகாசம் திரைப்படம் இன்று மறுவெளியீடு செய்யப்படும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், வெளியிடுவதற்கான பணிகள் முடிவடையாத காரணத்தால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால், அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காதலியை கரம் பிடித்த டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.