
நடிகை அஞ்சலி ராகவிடம் தவறாக நடந்துகொண்டதற்கு நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டார்.
நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதளத்தில் மிகவும் வேதனையுடன் விடியோ வெளியிட்டதற்காக நடிகர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
போஜ்புரி நடிகர் பவன் சிங் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் தனது படத்தின் சக நடிகை அஞ்சலி ராகவை அவரது சம்மதம் இல்லாமல் இடுப்பில் தொட்ட விடியோ வைரலானது.
இது குறித்து நடிகை அஞ்சலி ராகவ் தனது சமூக வலைதள பக்கத்தில் விடியோ வெளியிட்டு இருந்தார்.
நடிகை கூறியதென்ன?
அதில், “கடந்த 2 நாள்களாக நான் மிகவும் தொந்தரவுக்கு உள்ளானேன். பொதுவெளியில் இப்படி தொட்டால் எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
இதை நினைத்து நான் மிகவும் மோசமாக வருத்தமடைந்தேன், கோபமடைந்தேன். அழுகைக்கூட வந்துவிட்டது. எனக்கு அந்த நேரத்தில் என்ன செய்வதென தெரியவில்லை. ஏனெனில் அவரது ரசிகர்கள் அவரை கடவுளாகப் பார்க்கிறார்கள்” எனக் கூறியிருந்தார்.
இதற்கு பலரும் நடிகரை விமர்சித்தனர். அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கமும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தது
மன்னிப்பு கேட்ட நடிகர் கூறியதாவது?
இந்நிலையில், நடிகர் பவன் சிங் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கூறியதாவது:
அஞ்சலி ஜி, எனது பிஸியான ஷெட்யூலால் உங்களது நேரலையைப் பார்க்க முடியவில்லை.
இந்த விவகாரம் குறித்து எனக்குத் தெரிய வரும்போது மிகவும் மோசமாக உணர்ந்தேன்.
நாம் கலைஞர்கள் என்பதால் உங்களிடம் எந்தவிதமான தவறான உள்நோக்கத்திலும் நான் அப்படி நடந்துகொள்ளவில்லை. இருந்தும் என்னுடைய செயலே எனக்கு வருத்தமளிக்கிறது. என்னை மன்னித்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.