
ஆல்யா மானசா நடிக்கும் புதிய தொடரான பாரிஜாதம் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. முன்னதாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்த ஆல்யா மானசா, தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் நடிக்கிறார்.
இந்தப் புதிய தொடருக்கு பாரிஜாதம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாரிஜாதம் தொடரில், ஆல்யா மானசாக்கு ஜோடியாக ரக்ஷித் நடிக்கிறார். மேலும் இத்தொடரில் ஸ்வாதி, ராஜ்காந்த், லதா ராவ் உள்ளிட்டோர் நடிக்கிறார்.
தாயை இழந்த நாயகி ஆல்யா மானசா, பாடகரைத் திருமணம் செய்துகொண்டு புகுந்த வீட்டில் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
இவர், பாரிஜாதம் தொடரில் காதுகேட்கும் தன்மையை இழந்தவராக நடிக்கிறார். மாறுபட்ட கதையில் மானசா நடிப்பதால், இந்தத் தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், பாரிஜாதம் தொடர் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க: மீண்டும் விஜய்சேதுபதி! பிக்பாஸ் 9 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.