நடிகை ருக்மணி வசந்த் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.
இதனை தொடர்ந்து நடிகை ருக்மணி வசந்த் தமிழில் விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்தில் நடித்தார். ஆனால், அப்படம் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது, சிவகார்த்திகேயனுடன் மதராஸியில் நடித்துள்ளார். இப்படம் செப். 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த காந்தாரா - 2 அக்டோபர் 2 ஆம் தேதியும் இயக்குநர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆருடனான படம் அடுத்தாண்டும் வெளியாகிறது.
இதில், காந்தாரா - 2 மற்றும் பிரசாந்த் நீல் திரைப்படங்களுக்கு இந்தியளவில் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் ருக்மணி வசந்த் பான் இந்திய நடிகையாக மாறியுள்ளார்.
இப்படங்கள் வணிக வெற்றியைப் பெற்றால் ருக்மணியின் சம்பளமும் படத்தேர்வுகளும் மாறும் என்பதால் பல தயாரிப்பாளர்கள் இப்போதே அவருக்கு முன்பணம் கொடுத்து வருகிறார்களாம்!
இதையும் படிக்க: கண்ணப்பா ஓடிடி தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.