ரூ. 1200 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?

மகேஷ் பாபு - ராஜமௌலி படம் குறித்து...
ரூ. 1200 கோடியில் உருவாகும் ராஜமௌலி திரைப்படம்?
Published on
Updated on
1 min read

இயக்குநர் ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக பல கோடி ரூபாயில் அவர் அமைத்த செட் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது. தற்போது, படத்தின் படப்பிடிப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1200 கோடி என தகவலகள் தெரிவிக்கின்றன. தகவல் உண்மையானால், இதுவே இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாகும்.

உலகம் முழுவதும் 130 மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதால் ஹாலிவுட்டுக்கு இணையான வணிகமும் நடைபெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Summary

reports suggests director ss rajamouli and mahesh babu movie budget is rs.1300 crores

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com