1500-க்கும் மேற்பட்ட முறை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இன்றெல்லாம் தொலைக்காட்சி சேனல்கள் பெரும்பாலும் சீரியல் பார்ப்பதற்கும் செய்தி பார்ப்பதற்குமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஓடிடி வருகைகளுக்குப் பின் ஓடிடி தளங்களையும் பார்த்து வருகின்றனர்.
ஆனால், 2000-களின் துவக்கத்தில் தொலைக்காட்சிகள் பரவலவாகப் பயன்பாட்டிற்கு வந்தபோது, அதிகமும் திரைப்படங்களைப் பார்க்கவே நேரம் சரியாக இருந்தது. மாலையில் மட்டும் சீரியல்கள் இருக்கும் என்பதால் காலையிலிருந்து 24 மணி நேரமும் திரைப்படங்களை மட்டும் ஒளிப்பரப்பிய சேனல்கள் நிறைய இருந்தன.
அப்படி, தமிழில் பல சேனல்களில் ஒரே திரைப்படத்தை நூற்றுக்கும் மேற்பட்ட முறை பார்த்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.
ஆனால், ஒரே ஒரு திரைப்படம் மட்டும் தொலைக்காட்சியில் இதுவரை 1500-க்கும் மேற்பட்ட முறைகள் ஒளிபரப்பப்பட்டுள்ளதாம்.
இந்த அசாதாரண சாதனையைச் செய்தது கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் த்ரி விக்ரம் இயக்கத்தில் நடிகர்கள் மகேஷ் பாபு, திரிஷா நடிப்பில் வெளியான ’அத்தடு’ என்கிற தெலுங்கு திரைப்படம்தானாம்.
தெலுங்கு ரசிகர்களின் எவர்கிரீன் திரைப்படமான இது ஸ்டார் மா (star maa) என்கிற சேனலில் மட்டும் இதுவரை 1500-க்கும் அதிகமான முறை ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் ஒருவகை உலக சாதனை என்பதால் மகேஷ் பாபு ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்!
இதையும் படிக்க: ரூ. 100 கோடி வசூலித்த லோகா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.