
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பகிரப்பட்டு வரும் நிலையில், நடிகை லட்சுமி பிரியா இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவில்லை, அதற்காக தான் எந்தவொரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை என்றும், பங்கேற்குமாறு எந்தவொரு அழைப்பும் வரவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்பில் பிரவீன் பென்னட் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் நடிகை லட்சுமி பிரியா நாயகியாக நடித்து வருகிறார். சுவாமிநாதன் நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடரில் நடித்துவரும்போதே, விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் லட்சுமி பிரியா பங்கேற்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டு வந்தது. தற்போது இது குறித்து லட்சுமி பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் செல்லவுள்ளதாகத் தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. நான் எந்தவொரு ஆடிஷனுக்கும் செல்லவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு எந்தவொரு அழைப்பும் எனக்கு வரவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிக் பாஸ் 9 போட்டியாளராகும் சின்ன திரை நடிகை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.