கூலி திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் ஆமிர் கான், நாகர்ஜுனா, உபேந்திரா, ஷ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.
முக்கியமாக, அனிருத் பின்னணி இசை மற்றும் ரஜினியின் டீஏஜிங் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், கூலி திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகிற செப். 11 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் கண்ணப்பா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.