
இசையமைப்பாளர் அனிருத் மதராஸி படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று (செப்.5) வெளியான மதராஸி திரைப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை ருக்மணி வசந்த், நடிகர் வித்யுத் ஜமால் உள்ளிட்டோர் நடிப்பில் மதராஸி திரைப்படம் உருவாகியுள்ளது.
அமரன் படத்தின் பெரும் வெற்றிக்குப் பின் திரைக்கு வரும் சிவகார்த்திகேயன் படமென்பதால் அவரின் ரசிகர்கள் ஆவலாகக் காத்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு போதிய அளவு புரமோஷன் செய்யாததால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் எழவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தற்போது படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் உடன் இருக்கும் புதிய புகைப்படத்தை பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரசிகர்களுக்கு நன்றியும் மதராஸி படக்குழுவுக்கு வாழ்த்துகளும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.