

நடிகர் டொவினோ தாமஸ் சிறந்த ஆசிய நடிகருக்கான செப்டிமஸ் விருதை வென்றுள்ளார்.
மலையாளத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படத்திற்காக இந்த விருதை வென்றுள்ளார்.
நெதர்லாந்தில் ஆம்ஸ்டர்டெமில் வழங்கப்படும் தி செப்டிமஸ் விருது உலக அளவிலான மதிப்புமிக்க ஒரு விருதாகக் கருதப்படுகிறது.
இதில் சிறந்த நடிகருக்கான விருதை டொவினோ தாமஸ் நரி வேட்டை படத்தில் நடித்ததற்காக வென்றுள்ளார்.
டொவினோ தாமஸ் நடிப்பில், இயக்குநர் அனுராஜ் மனோஹர் இயக்கத்தில் உருவான ‘நரிவேட்டை’ கடந்த மே.23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இந்தப் படத்தின் மூலம் பிரபல தமிழ் இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாளத் திரையுலகில் அறிமுகமானார்.
ஏற்கெனவே, டொவினோ தாமஸ் 2018 படத்திற்காகவும் இந்த விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.