

‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்கவும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரியும் இசையமைப்பாளா் இளையராஜா மனு தாக்கல் செய்தாா்.
இசையமைப்பாளா் இளையராஜா சாா்பில் வழக்குரைஞா்கள் கே.தியாகராஜன், ஏ.சரவணன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
மைத்திரி மூவி மேக்கா்ஸ் தயாரிப்பில் நடிகா் அஜித் உள்ளிட்டோா் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்தப் படத்தில், ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, என் ஜோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இளையராஜாவின் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளன. அனுமதியின்றி அவரது பாடல்களைப் பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே அந்தப் பாடல்களை பயன்படுத்தத் தடை விதித்து, அவற்றை நீக்க வேண்டும்.
பாடல்களைப் பயன்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.