
தணல் வெளியீட்டுத் தேதி!
நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் ரிலீஸ் குறித்து...

தணல் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / அதர்வா
நடிகர் அதர்வா நடித்துள்ள தணல் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டே இப்படம் திரைக்கு வர வேண்டியது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
அன்னை ஃபிலிம் புரொடக்ஷன் எம். ஜான் பீட்டர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா 'தணல்' எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்க, '100', 'ட்ரிக்கர்' போன்ற படங்களைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரியாக அதர்வா நடித்திருக்கிறார்.

தணல் படத்தின் போஸ்டர். - படம்: எக்ஸ் / அதர்வா
இந்த நிலையில், இப்படம் வரும் செப்.12ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
Summary
The release date of Thanal, starring actor Atharvaa, has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






