சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!

சின்ன திரை நடிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் இன்று (செப். 7) நடைபெற்றது.
சின்ன திரை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள்!
Published on
Updated on
2 min read

சின்ன திரை நடிகர்கள் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா சென்னையில் இன்று (செப். 7) நடைபெற்றது.

சமீபத்தில் நடைபெற்ற சின்ன திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னை மதுரவாயலில் உள்ள பாக்கியலட்சுமி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

கலையுலக முன்னணியினர் மற்றும் பல்துறை பிரமுகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரத், செயலாளர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நவிந்தர், பொருளாளரகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கற்பகவல்லி மற்றும் இதர நிர்வாகிகளான வசந்த், சிவக்கவிதா, ஆதித்யா, தேவானந்த், பிரேமி, ஈஸ்வர் ரகுநாதன், ரஞ்சன், உள்ளிட்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

வெற்றி பெற்றவர்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோரை சமீபத்தில் சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில் இன்றைய நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

சிறப்பு விருந்தினர்களாக

பூச்சி முருகன், தலைவர், குடிசை மாற்று வாரியம் மற்றும் துணைத் தலைவர், நடிகர் சங்கம்;

பிரபாகர ராஜா, சட்டப்பேரவை உறுப்பினர், விருகம்பாக்கம்;

நடிகர் ராதாரவி, தலைவர், தென்னிந்திய சின்ன திரை மற்றும் திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கம்;

இயக்குநர் பேரரசு, செயலாளர், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம்;

காரம்பாக்கம் கணபதி, மதுரவாயல் சட்டப்பேரவை உறுப்பினர்;

ஆர்.கே. செல்வமணி, தலைவர், பெஃப்ஸி

நடிகர் எஸ்.வி. சேகர், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்;

மங்கை அரிராஜன், சின்ன திரை கூட்டமைப்பு தலைவர்;

டாக்டர் ஜாக்குவார் தங்கம் தலைவர், கில்டு தயாரிப்பாளர் சங்கம்;

சுஜாதா விஜயகுமார், தலைவர், தென்னிந்திய சின்ன திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;

சேகர் எம்சி , சென்னை பெருநகர மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு உறுப்பினர்;

லியாகத் அலிகான், செயளாலர், தமிழ்நாடு திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம்;

உதயசங்கர், தலைவர், தமிழ்நாடு சின்ன திரை தயாரிப்பாளர்கள் சங்கம்;

ரத்னா லோகேஸ்வரன் எம்சி, சென்னை பெருநகர மாநகராட்சி கல்விக் குழு உறுப்பினர் கலந்து கொண்டனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக

ஏ.சி சண்முகம், நிறுவனர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;

தமிழ்செல்வன், நிறுவனர், சேலம் ஆர் ஆர் பிரியாணி;

ஏசிஎஸ் அருண்குமார், தலைவர், எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம், மதுரவாயல்;

ஆன்மிக சொற்பொழிவாளர் முருகன் அருள் ஜெயம் எஸ்கே கோபி, நடிகர், தயாரிப்பாளர்;

மங்கை அரிராஜன், தலைவர், தமிழ்நாடு சின்ன திரை இயக்குநர்கள் சங்கம்;

கோபி பீம்சிங், செயலாளர், தமிழ்நாடு சின்ன திரை இயக்குநர்கள் சங்கம்;

அறந்தாங்கி சங்கர், பொருளாளர், தமிழ்நாடு சின்ன திரை இயக்குநர்கள் சங்கம்;

ராஜா வெங்கையா, தலைவர், தமிழ்நாடு சின்ன திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

ரமேஷ், செயலாளர், தமிழ்நாடு சின்ன திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

மூர்த்தி, பொருளாளர், தமிழ்நாடு சின்ன திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம்;

தாமஸ் கென்னடி, தலைவர், தமிழ்நாடு சின்ன திரை எழுத்தாளர்கள் சங்கம்;

பெருமாள் நெர், செயலாளர், தமிழ்நாடு சின்ன திரை எழுத்தாளர்கள் சங்கம்;

தர்மலிங்கம், பொருளாளர், தமிழ்நாடு சின்ன திரை எழுத்தாளர்கள் சங்கம்;

கஜபதி, தலைவர், தமிழ்நாடு சின்ன திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

சுரேஷ், செயலாளர், தமிழ்நாடு சின்ன திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

நரசி சுதர்சன், பொருளாளர், தமிழ்நாடு சின்ன திரை ஒலிப்பதிவாளர்கள் சங்கம்;

சரவணன், நிறுவனர், ஒ.எஸ்.ஈவன்ட்ஸ்; மேட்டூர். தணிகாசலம், பாலசுப்ரமணி, நிறுவனர். பி.எஸ்.ராக்ஸ் கிரியேஷன்ஸ்;

ராப்ஸ் பிரசாத், நடிகர், நிர்வாக தயாரிப்பாளர்; நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க | நிறைவடைகிறது ஆஹா கல்யாணம் தொடர்!

Summary

New executives of the serial Actors Association

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com