விஜய்யின் அனைத்து கனவுகளும் நிறைவேறட்டும்: த்ரிஷா

நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசியதாவது...
Leo Film Set, Actor Vijay with Actress Trisha
லியோ படத்தில் நடிகர் விஜய்யுடன் த்ரிஷா. படம்: எக்ஸ் / தி ரூட்.
Published on
Updated on
1 min read

ம்நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார்.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடசத்திரமாக இருக்கிறார். நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விருது நிகழ்ச்சி ஒன்றில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதன் பின்னர் த்ரிஷா பேசியதாவது:

விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளார்.

இந்த விடியோவை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com