
நடிகர் ராஜு நடித்த பன் பட்டர் ஜாம் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
பிக்பாஸ் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் ராஜூ ஜெயமோகன். இவர் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் பன் பட்டர் ஜாம். இப்படத்தை ராகவ் மிர்தாத் இயக்கியுள்ளார். சுரேஷ் சுப்ரமணியம் கதை எழுதியிருக்கிறார்.
மேலும் இப்படத்தில் ஆத்யா பிரசாத், சரண்யா பொன்வண்ணன், சார்லி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் வெளியான ஒரு காட்சியை பார்த்துவிட்டு, நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், படக்குழுவை பாராட்டியிருந்தார்.
திரையரங்குகளில் கடந்த ஜூலை 20 ஆம் தேதி வெளியான பன் பட்டர் ஜாம் திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இதையும் படிக்க: குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.