
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் என்ற புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
ஆல்யா மானசா நடிப்பில் பாரிஜாதம் என்ற தொடர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இன்றுமுதல் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், மேலுமொரு புதிய தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபமாக அடுத்தடுத்து புதிய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைப்போன்று தொடர்களுக்கும் ஜீ தமிழ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அந்தவகையில், அனைத்துத் தரப்பு ரசிகர்களைக் கவரும் வகையிலும் புதிய தொடர்களை ஜீ தமிழ் நிர்வாகம் ஒளிபரப்பி வருகிறது. இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் ஆல்யா மானசா மாற்றுத்திறனாளியாக நடிக்கும் பாரிஜாதம் என்ற தொடர் இன்றுமுதல் (செப். 8) ஒளிபரப்பாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இல்லத்தரசிகளைக் கவரும் வகையில், திருமாங்கல்யம் என்ற தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடர் இரு நயாகிகள், ஒரு நாயகன் கதையம்சத்துடன் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர். ஆர். கிரியேஷன் இத்தொடரை தயாரிக்கிறது.
காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர். இதில், மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்துள்ளார். பிரித்விராஜ் என்பவர் தெலுங்கில் மூன்று தொடர்களில் நடித்துள்ளார்.
இதையும் படிக்க | என்னை நம்பியவர் - ஆல்யா மானசா பகிர்ந்த படம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.