26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?

ரோஜா ரோஜா பாடலைப் பாடியவர் வைரல்....
பாடகர் சத்யன் மகாலிங்கம்
பாடகர் சத்யன் மகாலிங்கம்sathyan mahalingam
Published on
Updated on
2 min read

ரோஜா ரோஜா பாடலைப் பாடிய பாடகர் திடீரென இணையத்தில் வைரலாகியுள்ளார்.

இணைய வளர்ச்சிக்குப் பின் சமூக வலைதளங்களில் எப்போது, எந்த விஷயம் வைரலாகும் எனத் தெரிவதில்லை. திடீரென இன்று நடந்த சம்பவம் சில நாள்கள் ஆக்கிரமித்தால் தொடர்பு இல்லாமல் என்றோ பல ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவமும் பட்டியலில் இணைந்து தீயாக டிரெண்டிங்கில் இடம்பெறும்.

அந்த வகையில், சற்றும் எதிர்பாராத விதமாக ரசிகர்களைக் கவர்ந்த தமிழ்த் திரைப்பாடலான, ‘ரோஜா... ரோஜா’ பாடலைப் பாடிய பாடகர் ஒருவர் கடந்த சில நாள்களாக முகநூல், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

அவர் பெயர் சத்யன் மகாலிங்கம். இயக்குநர் கதிர் இயக்கிய காதலர் தினத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இடம்பெற்ற, ‘ரோஜா.. ரோஜா’ பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார்.

படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு இந்தப் பாடல் சிறந்த பங்களிப்பைச் செய்திருந்தது. இதனால், அப்போது பல இசை நிகழ்ச்சிகளிலும் இப்பாடல் பாடப்பட்டது.

அப்படி, மேடைப் பாடகரான சத்யன் இந்த, ‘ரோஜா ரோஜா’ பாடலை 26 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ச்சியொன்றில் பாடியிருக்கிறார். மிகக் கடினமான பாடல் என்றாலும் அந்த நிகழ்ச்சியில் மிகச்சாதாரணமாக சத்யன் பாடியது இன்றைய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1999 ஆம் ஆண்டு வெளியான காதலர் தினத்தில் இடம்பெற்ற இப்பாடல் பாடகர் சத்யனால் மீண்டும் வைரலாகியுள்ளதால் இவர் யார் என பலரும் தேட ஆரம்பித்துவிட்டனர்.

மேடைப்பாடகராக அறியப்பட்ட சத்யனின் திறமையைக் கண்ட இசையமைப்பாளர்கள் பல பாடல்களைப் பாட வாய்ப்பளித்தனர்.

முக்கியமாக, சத்யன் பாடிய கலக்கப்போவது யாரு (வசூல் ராஜா MBBS), ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் (கழுகு), சில் சில் மழையே (அறிந்தும் அறியாமலும்), அட பாஸு பாஸு (பாஸ் என்கிற பாஸ்கரன்), குட்டி புலி கூட்டம் (துப்பாக்கி), கனவிலே கனவிலே (நேபாளி), தீயே தீயே (மாற்றான்), குப்பத்து ராஜாக்கள் (பானா காத்தாடி) ஆகிய பாடல்கள் பிரபலமாக இருந்தும் சத்யனுக்கு பெரிய வெளிச்சத்தைக் கொடுக்கவில்லை.

திறமையான பாடகராக இருந்தும் தொடச்சியான வாய்ப்புகள் இல்லாததால் குறைவான எண்ணிக்கையிலேயே பாடல்களைப் பாடியிருக்கிறார். கரோனா காலத்தில் பாடல்கள் வாய்ப்பு கிடைக்காததால் பொருதாளார தேவைக்காக உணவகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்த நிலையில், சத்யனுக்கு இன்ப அதிர்ச்சியாக இவர் பாடிய ’ரோஜா, ரோஜா’ பாடல் 26 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகி மீண்டும் இவரை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

இதற்காக, சத்யன் நன்றி தெரிவித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுவாரஸ்யமாக, அன்று ரோஜா ரோஜா பாடலைப் பாடியபோது அவருடன் இணைந்து கோரஸ் பாடிய பாடகி ஒருவரையே சத்யன் காதல் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகிறது!

Summary

viral singer sathyan mahalingam who sung roja roja song

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com