ஆக்‌ஷன் ஹீரோ..! சிவகார்த்திகேயனை பாராட்டிய சூப்பர் ஸ்டார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘மதராஸி’ படத்தின் நாயகன் சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளது குறித்து..
 சிவகார்த்திகேயன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சிவகார்த்திகேயன் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் Instagram
Published on
Updated on
1 min read

ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் வெளியான மதராஸி திரைப்படத்தைப் பார்த்து நடிகர் சிவகார்த்திகேயனை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் - நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது கூட்டணியில் உருவான புதிய திரைப்படம், மதராஸி. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.

மதராஸி படத்தை, பல முன்னணி நட்சத்திரங்கள் பாராட்டி வரும் சூழலில், சிவகார்த்திகேயனின் இந்த புதிய படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது:

”சற்று முன்பு, மதராஸி படத்திற்காக எனது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து பாராட்டுக்களைப் பெற்றேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், மதராஸி படத்தில் நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள் தனக்கு மிகவும் பிடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதாகவும், சூப்பர் எஸ்கே! ஆக்‌ஷன் ஹீரோ ஆகிடீங்க எனப் பாராட்டியதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மொட்டை அடித்தது ஏன்? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்!

Summary

A.R. Superstar has praised actor Sivakarthikeyan after watching the film Madarasi, directed by A.R. Murugadoss.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com