நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார்.
தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலையாளத்தில் ஐயம் கேம் என்கிற படத்திலும் தமிழில் காந்தா படத்திலும் நடித்து வருகிறார்.
அதேநேரம், இயக்குநர் பவன் சதினேனி இயக்கத்தில் நேரடி தெலுங்கு படமான ’ஆகாசம்லோ ஒக தாரா’ (வானத்தில் ஒரு நட்சத்திரம்) படத்திலும் துல்கர் சல்மான் நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
தொடர்ந்து, துல்கர் சல்மான் தன் 41-வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ரவி நெலகுதிதி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் அண்மையில் துவங்கியது.
இந்த நிலையில், இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதை விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கும் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இதையும் படிக்க: ஆர்வமூட்டும் கைதி மலேசிய ரீமேக்po டீசர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.