மது அருந்திவிட்டு இளையராஜா போட்ட ஆட்டம்... ரஜினி பேச்சால் கலகலப்பு!

இளையராஜா நிகழ்வில் ரஜினி பேசியது வைரலாகியுள்ளது...
rajinikanth and ilaiyaraaja
ரஜினிகாந்த் மற்றும் இளையராஜா
Published on
Updated on
1 min read

இளையராஜாவுக்கான பாராட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய வைரலாகியுள்ளது.

இசையமைப்பாளர் இளையராஜா திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு சார்பில் நேற்று (செப்.13) பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

நிகழ்வில் இளையராஜா பேசிக்கொண்டிருந்தபோது திடீரென இருக்கையிலிருந்து எழுந்துவந்த நடிகர் ரஜினிகாந்த், “ஜானி படப்பிடிப்பின்போது விஜிபியில் நான் தங்கியிருந்தேன். படப்பிடிப்பு முடிந்த இரவில் இயக்குநர் மகேந்திரனும் நானும் மது அருந்திக்கொண்டிருந்தோம். அப்போது, இளையராஜா வந்தார். குடிக்கிறீங்களா? எனக் கேட்டோம். சரி என்றதும், பியர் பாட்டலை கொடுத்தோம்.

அரை பியரை அடித்துவிட்டு அன்று இளையராஜா போட்ட ஆட்டமிருக்கிறதே... ஐய்யய்யோ... பலரின் கிசுகிசுக்களைக் கேட்டார். முக்கியமாக, நடிகைகளைப் பற்றி.. அண்ணனுக்கு (இளையராஜா) பெரிய காதல் இருந்தது. அதனால்தான், இப்படியான பாடல்கள் கிடைத்தன. ராஜாவைப் பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு சந்தர்பத்தில் சொல்கிறேன்” என்றார்.

ரஜினி பேசப்பேச அரங்கிலிருந்தவர்கள் கைதட்டி உற்சாகமடைந்தனர். பின், இளையராஜா, ‘இதுதான் வாய்ப்பு என இல்லாததையும் சொல்கிறார்’ என சிரித்துக்கொண்டே சொன்னார்.

Summary

actor rajinikanth spokes about his memories with ilaiyaraaja

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com