
நடிகர் அஜித் நடிப்பில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மறுவெளியீடாகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது.
கார் ரேஸிங்கில் பிஸியாக இருக்கும் அஜித்தின் புதிய படம் உருவாக தாமதமாகும் நிலையில் இந்த அறிவிவிப்பு அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரண் இயக்கத்தில் நடிகர் அஜித், பூஜா நடிப்பில் 2004-இல் வெளியாகி அட்டகாசம் என்ற திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை விஜய்ம் சினி கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. இந்நிலையில், இந்தப் படத்தை வரும் அக்.31ஆம் தேதி மறுவெளியீடாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஐஎஃப்பிஏ மேக்ஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக பிரியா நாயர் மறுவெளியீடு செய்கிறார்.
கடைசியாக அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த ஏப்ரலில் திரையில் வெளியானது.
இது குறித்து இயக்குநர் சரண் கூறியதாவது:
பாதுகாப்புக்கு யாரும் இல்லை… இவன் பத்து விரல்களும் காவல் துறை… வெற்றி வெற்றிதான் ஆயுள்வரை… தல போல வருமா?
'தல' யே வர்றாரு...அக்டோபர் 31 அன்னிக்கு! தீபாவளிக்கு பத்து நாள் தள்ளிதான் நம்ம 'தல தீபாவளி' ! 'அதகளம்' பண்றோம்! எனப் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.50 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.