
ராமாயணம் தொடர் ஒளிபரப்பாகும் நேரத்தில் ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடர் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, ராமாயணம் தொடரின் ஒளிபரப்பு நேரத்தை மாற்ற வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜிஷ்ணு மேனன், இவர் நடிகை நடிகை ரேஷ்மா முரளிதரன் உடன் புதிய தொடரில் நடிக்கிறார். இந்தத் தொடருக்கு தங்க மீன்கள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தங்க மீன்கள் தொடரில் இவர்களுடன் மிஸ்டர் மனைவி தொடரில் நடித்த அனுராதா, ராமச்சந்திரன் மகாலிங்கம், சர்வேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தத் தொடர் சன் தொலைக்காட்சியில் வரும் செப். 29 ஆம் முதல் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
தற்போது, ராமாயணம் தொடர் இரவு 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில், தங்க மீன்கள் தொடரை ஒளிபரப்பு செய்தால், ராமாயணம் தொடர் வேறு நேரத்திற்கு மாற்றப்படும்.
இந்த நிலையில், ராமாயணம் தொடரை வேறு நேரத்திற்கு மாற்ற வேண்டாம் எனவும், அப்படி மாற்ற வேண்டும் என்றால் வீர் ஹனுமான் என்ற தொடரை மாற்ற செய்யுங்கள் எனவும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக இரவு 6.30 மணிக்கு ஆன்மிக தொடர் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில், வேறு தொடரை ஒளிபரப்பாதீர்கள், வேண்டுமென்றால் வேறொரு ஆன்மிக தொடரை ஒளிபரப்பு செய்யுங்கள் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஜிஷ்ணு மேனன் மற்றும் ரேஷ்மா முரளிதரன் நடிக்கும் புதிய தொடரான தங்க மீன்கள் சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுவதால், ராமாயணம் தொடர் வேறு நேரத்திற்கு மாற்றப்படுமா? அல்லது தங்க மீன்கள் தொடர் வேறொரு நேரத்தில் ஒளிபரப்பாகுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிக்க: மகாநதி தொடரில் முக்கிய நடிகர் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.