
ஷபானா நடிக்கும் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி, நகைச்சுவை, காதல் உள்ளிட்டவை அடங்கிய தொடராக போலீஸ் போலீஸ் இணையத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது. நடிகை ஷபானா செம்பருத்தி, மிஸ்டர் மனைவி உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமானவர்.
போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் பிரதான பாத்திரங்களில் மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் ஷபானா, சுஜிதா, வின்செண்ட் ராய், சத்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
காவல் நிலையத்தில் போலீஸ் - திருடன் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவைக் கலந்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாக முன்னோட்டக் காட்சியின் மூலம் தெரிகிறது.
இந்த நிலையில், போலீஸ் போலீஸ் இணையத் தொடர் வரும் செப். 19 ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
முன்னதாக, ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து, தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில், போலீஸ் போலீஸ் இணையத் தொடரும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.