
கலைமாமணி விருது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ரசிகர்கள் ஆதரவில்லாமல் இப்படி நடந்திருக்காது என கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இயக்குநராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறியுள்ளார் எஸ்.ஜே.சூர்யா.
இவரது நடிப்பில் 2021-இல் மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை என்ற இரண்டு படங்கள் வெளியாகியிருந்தன.
இவரது சிறப்பான நடிப்பிற்காக 2021ஆம் ஆண்டின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ’கில்லர்’ எனும் புதிய படத்தினை அவரே இயக்கி, நடித்து வருகிறார்.
கலைமாமணி விருது குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பதிவில் கூறியுள்ளதாவது:
கோடான கோடி நன்றி!!!
என்னை கலைமாமணியாகத் தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை, நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும், பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பும் ஆருயிருமான என் ரசிக பெருமக்களுக்கும், இந்தப் பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி!!!! எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.