

நடிகை ருக்மணி வசந்துக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
கன்னடத்தில் இரண்டு பாகங்களாக வெளியான ‘சப்த சாகரதாச்சே எல்லோ - சைட் ஏ', ‘சைடு பி’ ஆகிய படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ருக்மணி வசந்த். கன்னட ரசிகர்களை மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் இந்தப் படம் கவனம் பெற்றது.
இதனை தொடர்ந்து ருக்மணி வசந்த், விஜய் சேதுபதியுடன் ஏஸ் திரைப்படத்திலும் சிவகார்த்திகேயனுடன் மதராஸியிலும் நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.
தற்போது, இவர் நடித்த காந்தாரா - 2 அக்டோபர் 2 ஆம் தேதியும் இயக்குநர் பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆருடனான படம் அடுத்தாண்டும் வெளியாகிறது.
இந்த நிலையில், சேலை மற்றும் மாடர்ன் உடைகளில் ரசிகர்களைத் திணறடிக்கும் ருக்மணிக்கு இந்தியளவில் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர்.
ருக்மணி வசந்த்
சிரிப்பும் சோகத்தை பளிச்சென ருக்மணியால் வெளிப்படுத்த முடிவதால், பலரும் நவீன கன்னட பைங்களி எனச் செல்லமாக அழைத்து வருகின்றனர்.
முக்கியமாக, இன்ஸ்டாகிராமில் நிறைய ரீல்ஸ்கள் ருக்மணிக்காக உருவாக்கப்பட்டு அவரை இந்தியாவின் புதிய கிரஷ் (crush) எனக் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: இது நடந்தால் மட்டுமே 96 - 2 உருவாகும்: பிரேம் குமார்
summary
fans celebrates actor rukmini vasanth's beauty
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தனுஷுடன் இணையும் ருக்மிணி வசந்த்?
சம்பளத்தை உயர்த்திய ருக்மணி வசந்த்!

சிறகடிக்க ஆசை சீரியல் படப்பிடிப்பில் 2 மணிநேரம் அழுத வெற்றி வசந்த்! ஏன்?

துருவ் - ருக்மணி நடிப்பில் புதிய திரைப்படம்?
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

