தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை பிரபலங்கள்!

கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை பிரபலங்கள் பட்டியல்...

News image
கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி- Photo : Instagram / PK Kamalesh - Gayathri
Updated On :24 செப்டம்பர் 2025, 5:00 am

இணையதளச் செய்திப் பிரிவு

சின்னத்திரை நடிகர்கள் கமலேஷ், மெட்டி ஒலி காயத்ரி உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் மூலம் பல்வேறு கலைப் பிரிவுகளைச் சேர்ந்த சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்படுகிறது.

தற்போது, 2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் வழங்கப்படவுள்ளது. கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் விருது பட்டயம் வழங்கப்படவுள்ளது.

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், அக்டோபர் மாதம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விருதுகளை வழங்கி கெளரவிக்கவுள்ளார்.

இயல், இசை, நாட்டியம், நாடகம், திரைத்துறை, சின்னத்திரை உள்பட பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைமாமணி விருது பெறும் சின்னத்திரை பிரபலங்கள்

2021

பி. கே. கமலேஷ்

2022

மெட்டிஒலி காயத்ரி

2023

என்.பி. உமாசங்கர்பாபு - சின்னத்திரை நிகழ்ச்சித் தொகுப்பாளர்

அழகன் தமிழ்மணி - சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர்

summary

Kalaimamani Awards have been announced for TV actors Kamlesh, Metti Oli Gayathri and others.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.