ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.30-இல் தீா்ப்பு

ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தேதி...
சைந்தவி, ஜி.வி. பிரகாஷ்
சைந்தவி, ஜி.வி. பிரகாஷ்
Updated on
1 min read

இசையமைப்பாளா் ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி விவாகரத்து கோரிய வழக்கில் செப்.30-ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பு அளிக்கவுள்ளது.

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷும் பாடகி சைந்தவியும் கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிவதாக கடந்த 2024-ஆம் ஆண்டு அறிவித்தனா். இருவரும் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 24-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடா்பாக இருவரும் முடிவெடுக்க 6 மாத கால அவகாசம் வழங்கியது.

6 மாத கால அவகாசம் முடிந்து, சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோா் நேரில் ஆஜராகினா். தாங்கள் சோ்ந்து வாழ விரும்பவில்லை, பிரிந்து வாழ விரும்புவதாக இருவரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தெரிவித்தனா்.

அப்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தாா். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, விவாகரத்து கோரிய வழக்கின் தீா்ப்பை செப்.30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Summary

G.V. Prakash - Saindhavi divorce case verdict on Sept. 30

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com