அச்சுறுத்தும் விமர்சகர்கள்... சர்ச்சையில் பிரேம் குமார்!

பிரேம் குமார் கருத்து சர்ச்சையானது குறித்து...
பிரேம் குமார்
பிரேம் குமார்
Published on
Updated on
1 min read

இயக்குநர் பிரேம் குமார் விமர்சகர்கள் குறித்து பேசிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

96, மெய்யழகன் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் பிரேம் குமார் ஃபஹத் ஃபாசிலை வைத்து புதிய படத்தை எடுக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் துவங்குகிறது.

இதற்கிடையே 96 - 2 திரைப்படத்தின் கதையையும் முழுமையாக எழுதி முடித்திருக்கிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரேம் குமார், “மெய்யழகன் திரைப்படத்தை மலையாளத்தில் எடுத்திருந்தால் இன்னும் அதிகமாக தமிழர்கள் கொண்டாடியிருப்பார்கள் என பல பேர் கூறினார்கள். ஆனால், ஓடிடி வெளியீட்டிலேயே எனக்கான பாராட்டுகள் கிடைத்துவிட்டன. இருந்தும், தமிழில் எதிர்பார்த்த வசூல் நிகழவில்லை. விமர்சகர்கள் என்கிற பெயரில் பலர் எதிர்மறையாகப் பேசுவதால் பாதிப்பு ஏற்படுகிறது.

மெய்யழகனில் கிளி வளர்த்துபோல் காட்சிப்படுத்தியிருந்தேன். அதை ஒருவர் குறிப்பிட்டு கிளி வளர்த்துவது எவ்வளவு கஷ்டம் எனத் தெரியுமா? என விமர்சனம் செய்கிறார். இதுதான் விமர்சனமா? உண்மையில், ஒரு சிலரைத் தவிர்த்து பல விமர்சகர்கள் பைரசியைவிட பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் ஏதோ மனப்பிரச்னை இருக்கிறது” எனக் கூறினார்.

ஒரு இயக்குநராக பிரேம் குமாருக்கு ஆதங்கம் இருந்தாலும் மெய்யழகன் குறித்து எதிர்மறையாக எழுதியவர்களையும் அவர் சாடியதால், சமூக வலைதளங்களில் பலரும் பிரேம் குமாருக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர்.

முக்கியமாக, 96 திரைப்படம் வெற்றி பெற்றதற்கு விமர்சகர்களின் பங்களிப்பே அதிகம் என பிரேம் குமார் கூறியிருக்கிறார். அவரே, இப்போது விமர்சகர்களுக்கு மனப்பிரச்னை இருக்கிறது என்கிறார். உண்மையான பிரச்னை பிரேம் குமாரிடம்தான் இருக்கிறது எனக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Summary

director prem kumar spokes about reviewers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com