
நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக ஒரு திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடந்தாண்டு திருமணம் செய்தார்.
இந்நிலையில், அவரது தங்கை பூஜா சரத்குமார் உடன் இணைந்து தோச டையாரிஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பில் தனது முதல் படமான சரஸ்வதி எனும் படத்தை அவரே இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நவீன் சந்திரா, பிரியாமணி பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.