நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்குத் தேர்வான பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் விக்ரம் பிரபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “2022 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருதை தமிழக அரசிடமிருந்து பெறுவதில் நான் பெருமையும், பணிவும் அடைகிறேன். இந்த அங்கீகாரத்திற்காக அரசிற்கும், மதிப்பிற்குரிய நடுவர் குழுவிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் குடும்பத்தினர், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சக ஊழியர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என் பார்வையாளர்கள் - உங்கள் நிலையான அன்பு மற்றும் ஊக்கத்திற்கு நன்றி. இந்த அங்கீகாரம் எனக்குச் சொந்தமானது போலவே உங்களுக்கும் சொந்தமானது.
சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது, நான் தொடர்ந்து அதற்கு என் முழு பலத்தையும் கொடுப்பேன். வலிமையுடனும், அன்புடனும், உங்கள் விக்ரம் பிரபு” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: விஜய் சேதுபதி - புரி ஜெகன்நாத் படத்தின் பெயர் இதுதான்!
actor vikram prabhu released new post about his kalaimaamani selection.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.