Scenes from the movie One Battle After Another.
ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் படத்தின் காட்சிகள். படங்கள்: யூடியூப் / வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ்.

எது புரட்சி? ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் - திரை விமர்சனம்!

அமெரிக்க இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் திரைப்படம் பற்றி...
Published on
ஒன் பேட்டில் ஆப்டர் அனதர் திரை விமர்சனம்(4 / 5)

நடப்பு அரசியல் நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகரமானதாக உருவாகி உலகெங்கும் வெளிவந்திருக்கிறது, அமெரிக்க இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' (One Battle After Another) திரைப்படம்.

தாமஸ் பைன்சோன் எழுதிய வினிலேண்ட் நாவலை மையமாக வைத்து சுமார் இருபது ஆண்டுகளாக இந்தப் படத்திற்கான திரைக்கதையை பால் தாமஸ் ஆண்டர்சன் எழுதி வந்திருக்கிறார்.

’பிரெஞ்சு 75’ என்ற புரட்சி படையில் நாயகன் டிகாப்ரியோவும் நாயகி டெயானா டெய்லரும் சந்திக்கிறார்கள்.

அமைதியான புரட்சியாளராக இருக்கும் லெனார்டோ டிகாப்ரியோவுக்கும் அதிரடியான முடிவுகளை எடுக்கும் டயானா டெய்லருக்கும் காதல் மலருகிறது.

உண்மையில் அந்தக் காதலை தொடங்குவதும் முறிப்பதும் நாயகியாகவே இருக்கிறார்.

heroin in One battle after another
நாயகி டயானா டெய்லர். டிரைலர் காட்சியிலிருந்து.

பெர்ஃபிடியா பெவர்லி ஹில்ஸ் என தனது அறிமுகத்தை ஊர்ப் பெயருடனே தொடங்கும் நாயகி அனைவரையும் கவர்ந்திழுக்கிறார்.

குடும்ப அமைப்பு நாயகியின் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கிறது. மிகுந்த பாலியல் வேட்கை கொண்டவராக உருவாக்கப்பட்டிருக்கும் நாயகிதான் இந்தப் படத்தின் ஆன்மாகவும் கதையை மாற்றுபவராகவும் இருக்கிறார்.

ஒருகட்டத்தில் இந்தப் புரட்சிப் படை தலைமறைவாக வாழ வேண்டியுள்ளது.

மனைவியைப் பிரிந்த நாயகன் மகளுக்காக மட்டுமே வாழ்கிறார். பயத்துடன் வாழும் இவரது மகள் காணாமல் போகிறாள். அவரது மகளை மீட்டாரா? இல்லையா? என்பதுதான் மேலோட்டமான கதையாக இருக்கிறது.

இந்தப் படம் அப்பா - மகள் படமாக தெரிந்தாலும் இதன் ஆன்மா புரட்சி, புரட்சியாளர்கள் குறித்தது.

கட்டற்ற பாலியல் விருப்பு, சுதந்திரத்தில் தொடங்கி அந்தக் கதாபாத்திரம் எங்கே முடிவடைகிறது என்பதுதான் முக்கியமான படிப்பினையாக இருக்கிறது!

அரசாங்கத்திற்கு எதிராக எந்த ஒரு தனிமனிதனும் வெல்ல முடியாது. தோல்விதான் இயற்கை தரும் பரிசு! அதிகாரத்திற்கு முன்பு மண்டியிடாதவர்களின் மனப்போராட்டம் மிகப் பெரியது.

வெளியுலக மாற்றத்தைவிட அகவுலகு மாற்றமே மிகப் பெரிய புரட்சி என தத்துவ அறிஞர் ஓஷோ சொல்லியிருக்கிறார். இந்தப் படமும் அந்த இடத்தில்தான் முடிகிறது.

ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னை வருகிறது.‌ இந்த உலகத்தை தலைகீழாக புரட்டி போடவே ஒவ்வொரு புரட்சியாளர்களும் நினைக்கிறார்கள். வயதான பிறகு அவர்களது முடிவுகள் மாற்றமடைகின்றன.

இந்தப் படத்தின் ஓரிடத்தில் கார் துரத்தும் காட்சிகள் வருகின்றன. நமக்கே அங்கு பயணிப்பது போல மிகப் பெரிய திரை அனுபவத்தைக் கொடுக்கிறது.

trailer scenes.
படத்தின் காட்சி. படம்: யூடியூப் / வார்னர் ப்ரோஸ் பிக்சர்ஸ்.

பின்னணி இசையில் ஜானதன் கிரீன்வுட் நமது இதயத்துடிப்பை எகிற வைக்கிறார்.

டிகாப்ரியோ கதாபாத்திரம் வலுவற்ற, பயந்த, சில அரசியல் சரிநிலையில் சிக்கியுள்ள மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வரலாற்றில் நிறம், மதம் முக்கியமான அரசியலாக இருந்திருக்கிறது. இந்தப் படத்தில் வில்லனாக வரும் ராணுவ தளபதியின் வாழ்க்கை முக்கியமான பகுதியாக இருக்கிறது.

அமெரிக்காவின் வரலாற்றைச் சொல்லும்போது பிலிப்பின்ஸின் வரலாறும் முக்கியம் என்று படத்தில் வருகிறது. ஒரு காட்சியில் டிகாப்ரியோ பேட்டில் ஆஃப் தி அல்ஜீயர்ஸ் படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

அகதிகள் மீதான அரசியலும் மத அரசியலும் படம் முழுவதும் வருகிறது. செப். 26 ஆம் தேதி வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம், அமெரிக்காவில் மிகப் பெரிய சலசலப்பை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

American director Paul Thomas Anderson's film 'One Battle After Another' has been released worldwide, creating a revolutionary take on current political events.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com