நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ஆர்யன் திரைப்படத்தின் டீசர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரவீன் இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆர்யன் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கட்டா குஸ்திக்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் முதன்மை நாயகனாக நடித்த ஆர்யன் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (செப்.30) வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவான இரண்டு வானம் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பராசக்தி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.