
பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் போஸ்டர்!
பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் பாத்திரத்தின் போஸ்டர்.

பள்ளிச்சட்டம்பி படத்தின் கயாது லோஹர் பாத்திரத்தின் போஸ்டர்.
’பள்ளிச்சட்டம்பி’ படத்தில் கயாது லோஹர் நடிக்கும் பாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி மற்றும் நடிகர் டொவினோ தாமஸ் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’பள்ளிச்சட்டம்பி’.

இப்படத்தில், நடிகை கயாது லோஹர் நாயகியாக நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பாத்திரத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்தப் படத்தில் நடிகர்கள் விஜயராகவன், சுதீர் கரமானா, பாபுராஜ், வினோத் பிரசாந்த் அலெக்ஸாண்டர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1950 - 1960 காலத்தில் நடைபெறும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ’பள்ளிச்சட்டம்பி’ திரைப்படத்துக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இந்தத் திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகிறது.
Summary
The film crew has released the poster of the character played by Kayadu Lohar in the movie 'Pallisattam'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







