சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல், சிங்கப் பெண்ணே உள்ளிட்ட பல முக்கிய தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல், சிங்கப் பெண்ணே, மூன்று முடிச்சு, ஆடுகளம் தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது. வரும் பிப். 9 ஆம் தேதி முதல் புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்நீச்சல் - 2
ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கும் வீட்டுக்கு செல்லும் மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்னைகளை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.
சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 9.30 மணிக்கு எதிர்நீச்சல் தொடர்கிறது (எதிர்நீச்சல் -2) ஒளிபரப்பாகி வரும் நிலையில், இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
மூன்று முடிச்சு
சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8.30 மணிக்கு மூன்று முடிச்சு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் ஸ்வாதி கொண்டே நாயகியாகவும், நியாஸ் கான் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
இந்தத் தொடர் இனி 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடுகளம்
நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் மெளன ராகம் -2 தொடர் நாயகன் சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார். மேலும், பிரதான பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
ஆடுகளம் தொடர் இரவு 10 மணிக்கு வாரத்தின் ஏழு நாள்களும் ஒளிபரப்பாகிய வரும் நிலையில், இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு மலர்கள்
நடிகை ஹிமா பிந்து பிரதான பாத்திரத்தில் நடிக்கும் புதிய தொடரான இரு மலர்கள் தொடர் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை 1 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இனி பிற்பகல் 2.30 மணிக்கு 30 நிமிடங்கள் மட்டும் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஹிமா பிந்து, சந்தோஷ் மற்றும் ஜீவிதா ஆகியோர் இந்தத் தொடரில் பிரதான பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
சிங்கப் பெண்ணே
சிங்கப் பெண்ணே தொடர் 2023 அக்டோபர் 9 ஆம் தேதிமுதல் ஒளிபரப்பாகிவருகிறது. இத்தொடருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையடுத்து, கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கிராமத்தில் பிறந்த விவசாயியின் மகள், ஆட்சியராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் நகரத்திற்கு வந்து சந்திக்கும் சவால்களை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்படுகிறது.
சிங்கப் பெண்ணே தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும், இனி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The broadcast times of several major serials, including Ethir Neechal and Singa Penne, which air on Sun TV, have been changed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிங்கப் பெண்ணே தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!

கனா கண்டேனடி தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் தொடர்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




