பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

வாய்ப்பு கிடைத்தால் பிரதமரை மாற்றிவிடுவேன்: கிஷோர்

பிரதமர் மோடி குறித்து கிஷோர்....

prime minister modi, actor kishore

பிரதமர் மோடி, நடிகர் கிஷோர்

Published On :

வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன் என நடிகர் கிஷோர் சொன்னது வைரலாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என திரைத்துறையில் முக்கியமான நடிகராக இருப்பவர் கிஷோர். பொல்லாதவன் திரைப்படம் மூலம் பெரிதாகக் கவனிக்கப்பட்டவர், ஆடுகளம் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

ஹரிதாஸ் திரைப்படத்தில் நாயகனாக நடித்ததுடன் தொடர்ந்து, விசாரணை, வடசென்னை என வெற்றி மாறன் திரைப்படங்கள் உள்பட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.

தற்போது, இவர் நடிப்பில் உருவான மெல்லிசை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நேர்காணலின் போது, ‘கால எந்திரம் கிடைத்தால் எதை மாற்றுவீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

அதற்கு கிஷோர், “அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் 2014-க்குச் சென்று பிரதமர் மோடியை மாற்றிவிடுவேன். வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். இப்போது, நாட்டில் வெறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. இப்படியே சென்றால், இதனை மாற்ற பல ஆண்டுகள் ஆகும். அன்பு இல்லையென்றால் எதுவும் இருக்காது” என அதிரடியாக பதிலளித்துள்ளார். கிஷோரின் இக்கருத்தைப் பலரும் பாராட்டி வைரலாக்கி வருகின்றனர்.

Summary

actor kishore shares his thought about pm modi

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.