இயக்குநர் சந்தீப் வங்கா அனிமல் பார்க் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2027 மத்தியில் நடைபெறும் எனக் கூறியுள்ளார்.
இந்தப் படம் இரண்டு சகோதரர்களுக்கான இடையையேயான் போரை மையாமாக வைத்து உருவாக இருப்பதாக இயக்குநர் சந்தீப் தெரிவித்துள்ளார்.
சந்தீப் வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் கடந்த 2023-ல் வெளியான அனிமல் திரைப்படம் ரூ.900 கோடி வசூலித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. தந்தை மகன் கதையை மையமாக வைத்து உருவான இந்தப் படம் வரும் பிப். 13ஆம் தேதி ஜப்பானில் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படத்துக்காக இசையமைப்பாளர் ஹர்ஷ்வர்தன் ராமேஷ்வர், ஒலி வடிவமைப்பு சச்சின் சுதாகரன், ஹரிஹரன் முரளிதரன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைத்தது.
ஜப்பானில் திரையரங்கில் வெளியாகவதற்கு முன்பான சிறப்புத் திரையிடலில், ஜப்பான் ரசிகர்களுடன் காணொலியில் ரசிகர்களுடன் பேசும்போது சந்தீப் வங்கா கூறியிருப்பதாவது:
ஸ்பிரிட் படம் முடிந்ததும் அனிமல் பார்க் தொடங்கும். இந்தப் படத்தில் பல அனிமல்கள் (மிருகங்கள்) இருக்கின்றன. ஏனெனில், அஜிஸே ஒரு அனிமல்தான்.
ஒரே மாதிரி இருக்கும் இரண்டு சகோதரர்களுக்கு இடையே போர் வெடிக்கிறது. அனிமல் பார்க் எனும் தலைப்பு சரியானதென நினைக்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை நாங்கள் 2027 மத்தியில் தொடங்கவிருக்கிறோம் என்றார்.
நடிகர் ரன்பீர் கபூர், “நாங்கள் வாரம் அல்லது மாதத்துக்கு பல முறை இந்தப் படம் குறித்து பேசுவோம். ரன்விஜய் மற்றும் அஜிஸ் கதாபாத்திரத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
Summary
There will be more animals in "Animal Park", filmmaker Sandeep Reddy Vanga said on Wednesday, confirming that the follow-up to his 2023 blockbuster "Animal" will go on floors in mid-2027.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவலா்களுக்கு சிறைத் துறை பணியாளா் நிா்வாக வாரியம் மூலம் பணியிட மாறுதல்: டிஜிபி சந்தீப் ராய் ரத்தோா் உறுதி

வாஜ்பாயுடன் இணைந்து செயல்பட்டதை திமுக மறக்கக் கூடாது! காங்கிரஸ் விமர்சனம்

சிறைத்துறை டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் மாற்றம்!

9.5.1976: கடும் வெய்யிலுக்கு கிண்டி பாம்பு பண்ணையில் 30 பாம்புகள் பலி
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



