சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

‘கூஸ்கோா் பண்டத்’ திரைப்பட டீசரை நீக்க மத்திய அரசு உத்தரவு

டீசரில் சாதிய ரீதியான சர்ச்சைக்கு விளக்கம் அளித்த பாலிவுட் இயக்குநர் குறித்து...

Filmmaker Neeraj Pandey

பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே. - படம்: முகநூல்

Updated On :

கூஸ்கோர் பண்டாட் என்ற படத்தின் தலைப்புக்கு எழுந்த சாதிய ரீதியான சர்ச்சைக்கு பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

சமூக உணர்வுகளைப் பாதித்தால் யூடியூப், நெட்பிளிக்ஸில் பிப்.3-ஆம் தேதி வெளியான இந்தப் படத்தின் டீசர் நீக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

என்ன பிரச்னை?

பாலிவுட் இயக்குநர் நீரஜ் பாண்டே எழுதி தயாரித்த ’கூஸ்கோர் பண்டாட்’ என்ற படத்தினை ரிதீஷ் ஷா இயக்கியுள்ளார். நடிகர் மனோஜ் பாஜ்பாயி நடித்துள்ள இந்தப் பட டீசர் பிப்.3-ஆம் தேதி வெளியானது.

கையூட்டு பெறும் பண்டிட் எனப் பொருள்படும் இந்தப் படத்தின் தலைப்பு சமூக வலைதளத்தில் மிகுந்த சர்ச்சையானது.

”மற்ற சமூகத்தினரின் பெயருடன் இந்த மாதிரி தலைப்புகளை வைக்க முடியுமா?”, “சொந்த சமூகத்தைக் குறித்தே இப்படி படம் எடுக்கலாமா? ஏற்கெனவே பிராமணர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படியாக எடுப்பது ஏன்? நெட்பிளிக்ஸிடம் இருந்து இப்படி எதிர்பார்க்கவில்லை” என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில், இது குறித்து இயக்குநர் விளக்கமளித்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:

சர்ச்சைக்கு இயக்குநர் விளக்கம்

எங்களது காவலதி பற்றின திரைப்படம் புனைவாக உருவாக்கப்பட்டது. இதில் வரும் ’பண்டாட்’ என்ற வார்த்தை பேச்சு வழக்கில் சாதாரணமாக வைக்கப்பட்டது. இந்தக் கதை தனி ஒரு மனிதைப் பற்றின கதை என்பதால் அது ஒரு சமூகம், மதம், சாதியைப் பிரதிபலிக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை.

இயக்குநராக நான் எனது பணியை மிகுந்த பொறுப்புடன் செய்து வருகிறேன். எனது கதைகல் நல்ல எண்ணத்துடன் மரியாதையுடன்தான் உருவாக்கப்படுகிறது.

இருந்தும் எங்கள் படத்தின் தலைப்பு சிலருக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியதைப் புரிந்துகொள்கிறோம். அந்த உணர்வுகளை நிஜமாகவே புரிந்துகொண்டு, அது தொடர்பானவற்றை நீக்குகிறோம்.

எங்களது படத்தை முழுமையாகப் பார்த்தால் நாங்கள் எந்த நோக்கத்தில் எடுத்துள்ளோம் என்பதை புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறேன். மாறாக, வெறும் டீசரைப் பார்த்து முடிவெடுக்காதீர்கள். விரைவில் படத்தை மக்களுக்கு காண்பிக்க ஆவலுடன் இருக்கிறோம் என்றார்.

Summary

Ghooskhor Pandat Director Breaks Silence On Title Controversy: 'Film Doesn't Represent Any Caste, Taking Down Promotional Material.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.