எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மனிதர்களை சம்பாதித்துவிட்டேன், பணம் முக்கியமல்ல: திவ்யாவுக்காக அரோரா செய்த செயல்!

தன்னை நேசிக்கும் திவ்யா, கனி திரு, சபரி போன்றவர்கள் வெட்கப்படும்படியான செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என அரோரா உருக்கம்.

News image

அரோரா - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :9 பிப்ரவரி 2026, 3:57 pm IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னை உண்மையாக நேசிக்கும் மனிதர்களை சம்பாதித்துவிட்டதாகவும், அதுவே வாழ்நாளில் தனக்கு போதுமானது எனவும் நடிகை அரோரா சின்கிளேர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

தன்னை நேசிக்கும் திவ்யா, கனி திரு, சபரி போன்றவர்கள் வெட்கப்படும்படியான செயல்களில் இனி ஈடுபடமாட்டேன் என்றும், அவர்களை ஒப்பிடும்போது பணம் முக்கியமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அரோரா. பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் போட்டியாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

சபரி, அரோரா, திவ்யா கணேசன், விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் இறுதிப்போட்டியாளர்களாக நீடித்தனர். இதில், திவ்யா கணேசன் வெற்றி பெற்றார். எனினும் 100 நாள்களுக்கு பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்து மக்கள் மனங்களில் அரோரா இடம்பெற்றார்.

அரோரா

அரோரா - படம் - எக்ஸ்

சமூக வலைதளங்களில் பிரபலமான அரோரா, தன்னை பின்தொடர்பவர்களுக்காக கட்டணம் நிர்ணயித்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு இது குறித்து அரோரா பேசியதாவது,

முன்பு நான் தனியாக இருந்தேன். எதைச் செய்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னை மட்டுமே பாதிக்கும். ஆனால், இப்போத் என் மீது உண்மையான அன்பு செலுத்தும் மக்களை சம்பாத்தித்துள்ளேன். கனி திரு எனக்கான குரல் கொடுத்துள்ளார். எந்த சூழல் வந்தாலும் படிப்பதை மட்டும் நிறுத்திவிடாதே என திவ்யா கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரோரா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அரோரா - படம் - எக்ஸ்

சபரி, விக்கல்ஸ் விக்ரம், துஷார், ஆதிரை என என் மீது உண்மையான அன்பு செலுத்துபவர்கள் கிடைத்துள்ளனர். பிக் பாஸ் வீட்டில் நூறு நாள்கள் அவர்களுடன் இருந்துள்ளேன். என்னுடைய எல்லா குணங்களையும் அறிந்தும் என் மீது அன்பு செலுத்துகின்றனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் என்னை அதே அன்புடன் வரவேற்கின்றனர்.

முன்பு நான் எப்படி இருந்தேன் என்பதை மனதில் வைத்து துளியும் அவர்கள் பழகவில்லை. இவளுடன் பழகினால் நம் மதிப்பு கெடும் என அவர்கள் நினைக்கவில்லை. அவர்களின் அன்பு உண்மையானது.

இனி, என்னால் அவர்களுக்கு எந்தவொரு அவமானமும் நேர்ந்துவிடக்கூடாது. பணம் எனக்கு முக்கியமல்ல. நல்ல மனிதர்களை சம்பாதித்துவிட்டேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

Summary

I have earned people's hearts, money is not important Aurora did for Divya

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.