சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

காதலர் நாளில் மறுவெளியீடாகும் திரைப்படங்கள்!

காதலர் நாள் மறுவெளியீட்டுத் திரைப்படங்கள்...

Published On :

காதலர் நாளை முன்னிட்டு சில திரைப்படங்கள் மறுவெளியீடாகவுள்ளன.

உலகம் முழுக்க கொண்டாட்டப்படும் நாள்களில் ஒன்றான காதலர் நாளுக்கு பலரும் காத்திருக்கின்றனர். விதவிதமான முறையில் தங்கள் காதலைச் சொல்ல விழைபவர்கள் ஒருபுறம் என்றால் காதலித்துக் கொண்டிருப்பவர்கள் மறுபுறம்.

இரண்டு தரப்பையும் ஏதோ ஒரு புள்ளியில் இணைப்பதைப் போல் சினிமாவும் இருக்கிறது. அன்றைய நாளில் காதல் படங்கள் வெளியாவது பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழில் அழுத்தமான காதல் கதைகளைக் கொண்ட திரைப்படங்கள் வெளியாகவில்லை. இதனால், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற பழைய திரைப்படங்களை மறுவெளியீடு செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்த வகையில், நடிகர் மாதவனின் மின்னலே, நடிகர் சூர்யாவின் மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் பிப். 13 அன்றும் குணால் நடித்த காதலர் தினம் திரைப்படம் பிப். 14 ஆம் தேதியும் மறுவெளியீடாகவுள்ளன.

மேலும், நடிகர் டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா திரைப்படமும் பிப். 13 அன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

rerelease tamil movies in valentines day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.