ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், நெட்பாக் விருதுக்கு இயக்குநர் செம்மலர் அன்னம் இயக்கிய “மயிலா” திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில், ஆசிய நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் திரைப்படங்களுக்கு நெட்பாக் (ஆசிய சினிமாவை மேம்படுத்துவதற்கான நெட்வொர்க்) விருது வழங்கப்படுகின்றது.
இந்த விருதுக்கு இயக்குநர் செம்மலர் அன்னம் இயக்கத்தில் உருவான “மயிலா” திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை, இயக்குநர் பா. ரஞ்சித்தின் “நீலம் புரோடக்ஷன்ஸ்” நிறுவனம் வழங்கியுள்ளது.
ஏற்கெனவே, ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் இம்மாதத் துவக்கத்தில் திரையிடப்பட்ட “மயிலா” படம் பெரும் வரவேற்புகளைப் பெற்றிருந்தது. இப்படத்தில், நடிகர்கள் பி. மெலடி டோர்காஸ், சுடர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இத்துடன், இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
The film “Mayila” directed by director Semmalar Annam has been nominated for the NETPAC Award at the Rotterdam International Film Festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவில் அசாமிய படமான ஆகுதி திரையிடல்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் புறக்கணிப்பு? விமர்சனங்களுக்கு ஆலியா பட் பதிலடி!

கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் டிசி டிரைலர்!
கேன்ஸ்-ல் திரையிடப்படும் மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய படம!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


