நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக சரஸ்வதி எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவிருக்கிறார்.
விரைவில் முதல் பார்வை வெளியாகுமென கூறியுள்ள வரலட்சுமி சரத்குமார் தான் நடிகையாகவும் இயக்குநராகவும் இருப்பது குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் பல படங்களில் நடித்துள்ள இவர் கடந்தாண்டு திருமணம் செய்தார்.
தங்கை பூஜா சரத்குமார் உடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார் ‘தோச டையாரிஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தத் தயாரிப்பில் ’சரஸ்வதி’ எனும் படத்தை அவரே இயக்கியுள்ளார். நவீன் சந்திரா, பிரியாமணி பிரகாஷ் ராஜ் நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்நிலையில், நடிகையும் இயக்குநரும் என்ற தலைப்பில் இந்தப் படத்தின் சுவாரசியமான விடியோ வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
Summary
Actress Varalakshmi Sarathkumar is making her directorial debut with the film Saraswathi.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடுவராகும் ராதிகா சரத்குமார்!

நாயகனாக அறிமுகமாகும் விலங்கு, மாமன் பட இயக்குநர்..! முதல் பார்வை விடியோ!

என்னவொரு பிறந்த நாள் பரிசு! த்ரிஷாவை வாழ்த்திய ராதிகா!
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



