பிக் பாஸ் பிரபலங்கள் பிரஜின் மற்றும் ஜனனி நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய் சேதுபதி தொடக்கி வைத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை தொடரில் நடித்து பிரபலமானவர் பிரஜின் பத்மநாபன். இவர் இந்தத் தொடரில் நடித்து புகழ்பெற்றதன் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

ஊருக்கு ரெண்டு ஊதாரி படத்தின் தொடக்க விழாவில்.... - படம்: இன்ஸ்டாகிராம்
இவர் டிஸ்யூம், மணல் நகரம், பழைய வண்ணாரப்பேட்டை, ஆண் தேவதை உள்ளிட்ட பல படங்களில் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
இதனிடையே, விஜய் தொலைக்காட்சியில் பிரஜின் நடித்த சின்னதம்பி தொடர் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, இவர் நடித்த அன்புடன் குஷி, வைதேவி காத்திருந்தாள் தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. முன்னதாக, இவர் யாஷிகா ஆனந்த் உடன் படிக்காத பக்கங்கள் படத்திலும் நடித்திருந்தார்.
இதனிடையே, அண்மையில் நிறைவடைந்த விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பிரஜின் கலந்துகொண்டார்.
இந்த நிலையில் நடிகர் பிரஜின் மற்றும் நடிகர் புகழ் நடிக்கும் புதிய திரைப்படம். ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்தப் படத்தில் ஜனனி நாயகியாக நடிக்கிறார்.
நகைச்சுவை பாணியில் எடுக்கப்படும் இந்தப் படத்தை யோகேஸ்வரன் மைனர் இயக்குகிறார்.
மேலும் இந்தப் படத்தில் விக்ரம் விஜய், மைம்கோபி, தீபா, அபிதா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்க விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு, படப்பூஜையை தொடக்கி வைத்தார்.
பெண் என்ற தொடரில் நடிக்கும்போது விஜய் சேதுபதி - பிரஜின் இருவரும் நண்பர்கள் என்பதால், தனது நண்பர் பிரஜினுக்காக நடிகர் விஜய் சேதுபதி படத்தின் முதல் காட்சியை கிளாப் அடித்து தொடக்கி வைத்தார்.
இந்தச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகி வருவதுடன், நண்பருக்காக விஜய் சேதுபதி செய்த செயலுக்கு அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
Summary
Actor Vijay Sethupathi launches Prajin's new film!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டிரெயின் திரைப்படத்தின் வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் தாணு பதில்!

விஜய் சேதுபதியைத் தவிர வேறு யாரும் இதைச் செய்ய முடியாது: மிஷ்கின்

விஜய் சேதுபதி வெளியிட்ட டெலிவரி பாய் படத்தின் டீசர்!

விரைவில் நடிகர் விஜய் சேதுபதியின் டிரெயின் டீசர்!
விடியோக்கள்

வார ராசிபலன்! | July 19 முதல் 25 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |




