நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடல் கன்னி என்ற திரைப்படம் திரைப்பட விழா ஒன்றில் சிறந்த படத்துக்கான விருது வென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.
அந்தப் பதிவில் தான் அணிந்திருக்கும் சேலை குறித்தும் நடிகை சுனைனா நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
காதலில் விழுந்தேன் என்ற திரைப் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சுனைனா (35), மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானவர்.
இவரது நடிப்பில் கடைசியாக குபேரா என்ற திரைப்படம் வெளியானது.
ரிஷி இன்ஸ்பெக்டர் என்ற இணையத் தொடர் மிகவும் வரவேற்பைப் பெற்றது.
யூடியூபரை மணந்த இவர் அவரது பெயரைத் தெரிவிக்காததும் குறிப்பிடத்தக்கது.
கடல் கன்னி என்ற படத்தை தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுனைனா உடன் ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் சுனைனா கூறியுள்ளதாவது:
எனது அம்மாவின் மிகவும் பழமையான புடவையை அணிந்தேன். புதுச்சேரி திரைப்பட விழாவில் எனது அடுத்த படமான ‘கடல் கன்னி’ 2026-ன் சிறந்த படத்துக்கான விருதை வென்றது.
சிறப்பான நாள், வரலாற்றிலும் மனதிலும் நிறவடைந்தது எனக் கூறியுள்ளார்.
Summary
Actress Sunaina announced on her Instagram page that the film Kadal Kanni has won the Best Film award at a film festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









