தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

காட்டாளன் படத்தின் முதல் பாடல்: துஷாரா விஜயனா இது?

நடிகை துஷாரா விஜயனின் புதிய படத்தின் முதல் பாடல் குறித்து...

News image

காட்டாளன் படத்தின் போஸ்டர். - படம்: இன்ஸ்டா / க்யூப் என்டர்டெயின்மென்ட்ஸ்.

Updated On :14 பிப்ரவரி 2026, 11:58 am IST

நடிகை துஷாரா விஜயனின் காட்டாளன் படத்தின் முதல் பாடல் இன்று (பிப்.14) மாலை 6 மணிக்கு வெளியாகவிருக்கிறது.

இந்தப் பாடலில் கவர்ச்சி நடனமாடியிருக்கும் நடிகைகள் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சார்பட்டா பரம்பரை படத்தில் அறிமுகமான துஷாரா விஜயன் நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு சமீபத்தில் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

நடிகர் ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்த துஷாரா தனுஷின் ராயன் படத்தில் நடித்து கவனம் பெற்றார். கடைசியாக வீர தீர சூரன் - 2 படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் துஷாரா தற்போது மலையாளத்திலும் அறிமுகமாகியுள்ளார்.

க்யூப்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தை பால் ஜியார்ஜ் இயக்கியுள்ளார்.

காட்டாளன் எனும் பான் இந்திய திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அங்கமாலி டையரிஸ் படத்தில் பிரபலமான ஆண்டனி வர்கீஸ் இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

பான் இந்திய மொழிகளில் உருவாகும் இந்தப் படத்துக்கு காந்தாரா இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடலில் இரு நடிகைகள் பின்புறமாக திரும்பி நிற்கும் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போஸ்டரில் இருப்பது நடிகை துஷாரா விஜயனா என கமெண்ட்ஸ்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Summary

The first song from actress Dushara Vijayan's film Kattalan is set to be released this evening (6 pm).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.