கடந்த 2016 முதல் 2022 வரை 7 ஆண்டுகளுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2014 முதல் 2022 வரை 9 ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள், 2015-2022 வரை 6 கல்வியாண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆா். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் மாணவா் விருதுகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.
சின்ன திரை விருதுகளில் சிறந்த நெடுந்தொடா்களுக்கு முதல் பரிசாக ரூ. 2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ. 1 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளா் பரிசு ரூ. 1 லட்சம், ஆண்டின் வாழ்நாள் சாதனையாளா் பரிசு ரூ. 1 லட்சம் மற்றும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி, தொழில்நுட்பக் கலைஞா்களுக்கு தலா 1 பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டன.

விருது பெற்ற மகிழ்ச்சியில்... - படம் - இன்ஸ்டாகிராம்
இதில், சிறந்த நடிகைக்கான பிரிவில் செம்பருத்தி தொடரில் நடித்த நடிகை ஷபானாவுக்கு விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் தனது காதல் கணவர் ஆர்யனுடன் காதலர் தினத்தை ஷபானா கொண்டாடியுள்ளார்.

விருதுடன் ஷபானா - படம் - இன்ஸ்டாகிராம்
இது தொடர்பான விருதுடன் இருக்கும் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஆர்யன், என்றும் உன்னுடைய மிகப்பெரிய ரசிகன் எனப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஆர்யன் பதிவிட்டுள்ளதாவது, எனது ராணியும் அவளின் மாநில விருதும். என்னுடைய மிகப்பெரிய வெற்றி என்பது திரையிலோ அல்லது மேடையிலோ அல்ல. உன் அருகில்தான். நீ தான். எங்கள் உலகை பிரகாசமாக்கிக்கொண்டிருப்பவளுக்கு காதலர் தின வாழ்த்துகள். என்றும் உன்னுடைய மிகப்பெரிய ரசிகன் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Serial actress Shabana celebrated Valentine's Day with a Tamil Nadu award
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தொழிலாளியிடம் லாட்டரியில் பணம் விழுந்ததாகக் கூறி ரூ.6 லட்சம் மோசடி

தர்மன் படப்பிடிப்பில் ராஷி கண்ணாவுக்கு சூப்பர்ஸ்டார் அளித்த பரிசு! என்ன தெரியுமா?

"Best Actor In A Leading Role" தேசிய விருது பெற்ற மம்முட்டி, கார்த்திக் ஆர்யன்!

நூருல் இஸ்லாம் பல்கலை.யில் புதிய பாடத் திட்டம் அறிமுகம்: ஐஏஎஸ் தோ்வாகும் முதல் மாணவருக்கு ரூ. 25 லட்சம் பரிசு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK




